பெண்களே இது உங்களுக்குத்தான்..!
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சமையல் அறையில் சீக்கிரம் வேலைகளை முடிக்கவும் வேலைகளை எளிமையாக்கவும் இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.
முட்டைகள் வாங்கி வந்து சில நாட்கள் ஆனாலும் கெட்டுபோகாமல் இருக்க அதன் மேலே சமையல் எண்ணெயை தடவி வைக்க கெடாமல் இருக்கும்.
வெங்காயம் சீக்கிரமே அழுவி போகாமல் இருக்க வாங்கினதும் வெயிலில் காயவைக்க நன்றாக இருக்கும்.
பாகற்காய் சமைக்கும்போது கசப்பு தெரியாமல் இருக்க உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் வைத்து பின் நீரில் அலசி சமைக்கலாம்.
கிளறிய சாதம் செய்யும்போது வெறும் சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து பின் சமைக்க சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.
ரவை கேசரி அல்வா ஆகிய இனிப்பு வகைகளை செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து செய்தால் இனிப்பு திகட்டாமல் இருக்கும்.
குருமாவில் தேங்காய் ஊற்றுவதற்கு மாற்றாக சர்க்கரைவள்ளி கிழங்கை அரைத்து சேர்த்தால் குருமா சுவையாக இருக்கும்.
எந்தவொரு இனிப்பு பலகாரம் செய்யும்போது சர்க்கரைக்கு பதிலாக கற்கண்டு தூளாக்கி செய்ய சுவை அதிகமாகும்.
அரிசி மற்றும் தானிய வகைகளை நீரில் அதிகமாக கழுவ கூடாது, அப்படி செய்தால் அதில் இருக்கும் தாதுபொருட்கள் கரைந்து போய்விடும்.
நூடல்ஸ் செய்யும்போது அது மீந்துபோய்விட்டால் அதை வீணாக்காமல் தயிர் சேர்த்து காய்கறிகளை நறுக்கி சேர்த்து கலக்கி சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு சீக்கிரம் வெந்துபோக அதில் சிறிது மஞ்சள் மற்றும் எண்ணெய் கலந்து வேகவைக்கலாம்.
உடம்பில் வேர்க்குரு ஏற்பட்டால் வேப்பிலை அரைத்து தடவி வர குணமாகும்.
உலர் பழங்கள் வைக்கும் டப்பாவில் சில கிராம்பு போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.