மேக்கப் பொருட்கள் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்..!
இக்காலக்கட்டத்தில் அழகு சாதன பொருட்கள் என்பது அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளாக மாறிவிட்டது. அதற்காக சந்தைகளில் நிறைய விதமான பிராண்டுகளிலும் பொருட்கள் விற்கப்படுகிறது. இதனால் அதை தேர்ந்தெடுப்பது என அனைவருக்கும் ஒரு குழப்பம் நிலவி வருகிறது. இதில் தவறான பொருட்களை பயன்படுத்தும்போது அது சருமத்திற்கு பலவித தீமைகளை உண்டாக்கும்.
எனவே அழகு சாதன பொருட்களை வாங்கும்போது மிகவும் கவனமாக இருந்து சருமத்திற்கு ஏற்றாற்போல தேர்ந்தேடுத்து வாங்குவது சிறந்தது. அழகு சாதன பொருட்கள் வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
சருமத்திற்கு ஏற்றபொருட்கள்:
ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சரும வகை உண்டு. சருமமானது வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம் என இருவகை உண்டு. அதற்கு தகுந்தவாறு பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் பொருட்களையும், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் எண்ணெயை கட்டுப்படுத்தும் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
சேர்க்கப்படும் அடக்கப்பொருட்கள்:
அழகு சாதன பொருட்களில் பலவித கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இதில் சிலவகை கெமிக்கல் சருமத்திற்கு எரிச்சலையும் ஏற்படுத்தும். உதாரணமாக பெர்பியூம், சல்பேட், பாரபன் போன்ற கெமிக்கல் நிறைந்த பொருட்கள் வாங்குவதை தவிர்த்தல் நல்லது. இயற்கை பொருட்களால் தயாரித்த அழகு சாதன பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
முதலில் பரிசோதனை:
எந்தவகையான பொருட்களையும் அப்படியே முகத்தில் பயன்படுத்தாமல் முதலில் கைகளில் சிறிது எடுத்து தடவி சிறிது நேரம் வைத்திருந்தும் எரிச்சல், அரிப்பு, சருமத்தில் ஏதேனும் ஆகவில்லை எனில் அதை முகத்தில் பயன்படுத்தலாம்.
பிராண்ட் நம்பிக்கை:
அழகு சாதன பொருட்களை வாங்கும்போது அங்கீகரித்த பிராண்டுகள் மட்டும் வாங்க வேண்டும். இத்தகைய பிராண்டுகள் தான் தரமான பொருட்களை தயாரிக்கும். பொருட்களை வாங்கும்போது சற்று கவனித்து வாங்க வேண்டும்.
விலை முக்கியமில்லை:
அழகு சாதன பொருட்களில் விலை குறைவாக இருக்கிறது எனில் அது தரமான பொருட்கள் என்பது இல்லை. தரமான பொருட்கள் எனில் அதன் விலை சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதுவே சருமத்திற்கும் ஏற்றது.
எனவே அழகு சாதன பொருட்களை வாங்கும்போது இதையெல்லாம் கட்டாயம் கவனத்தில் கொண்டு பொருட்களை பார்த்து வாங்கி சருமத்தில் பயன்படுத்த வேண்டும்.