கண் கோளாறுகளை குணமாக்கும் அவரைக்காய்..!
அவரக்காய் சராசரியாக கிடைக்கும் காய் வகைகளில் ஒன்றாகும். இது பல வகைகளில் இருந்தாலும், அதன் பலன்கள் ஒன்றுதான். அவரைக்காய் என்பது மருத்துவ முறைக்கும், பத்திய உணவிற்கும் சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. அவரக்காய் எல்லா நாட்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு காய்வகை ஆகும் . குழந்தைகளுக்கு அணைத்து விதமான காய்கறிகளையும் சாப்பிட கற்று தரவேண்டும் .அதில் ஏராளமான நன்மைகள் உள்ளது அவற்றை பார்க்கலாம்.
1. உடம்பில் உடம்பில் காயம் இருந்தால் அவரைக்காய் சுத்தம் செய்து பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட அந்த காயமானது ஆறிவிடும்
2. வாதம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் தொடர்ந்து அவரை பிஞ்சை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர அந்த வியாதி குணமாகும்.
3. கண் வலி கண் பார்வை குறைபாடு கண் குத்துதல் போன்ற உணர்வுகள் இருந்தால் அவரக்காய் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வது நல்லது அப்படி சாப்பிட்டு வர விரைவில் கண் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் சரியாகும்.
4. அவரக்காயில் பல வகைகள் இருந்தாலும் விதை பிடிக்காத பிஞ்சு அவரைக்காய் தான் மருத்துவ குணம் வாய்ந்ததாகும் மருத்துவ குணத்திலும் சரி பத்தியே உணவிலும் சேர்க்க பிஞ்சு விதை பிடிக்காத அவரைக்காய் சிறந்தது. அதனால் விதை பிடிக்காத அவரை காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
5. அப்படி சாப்பிட்டு வந்தால் அவரைக்காயின் முழு மருத்துவ பயனையும் நம்மால் பெற முடியும்.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..