இயற்கையான முறையில் வீட்டிலே பாடி லோஷன் செய்யலாம்…!
பாடி லோஷனை இயற்கை பொருட்களை வைத்து தயாரித்து இருப்பதால் இது சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. இது சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் வைத்திருக்கிறது. இதனால் சருமத்தில் ஏற்ப்படும் வறட்சி, அரிப்பு, வெடிப்பு ஆகியவற்றை சரிசெய்கிறது.
லோஷன் தயாரிக்க தேவையான பொருட்கள்:
தாவர எண்ணெய்: பாதாம் எண்னெய், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மெழுகு: சோயா மெழுகு, தேன் மெழுகு – 1 டேபிள் ஸ்பூன்
திரவ கேரியர்: கற்றாழை ஜெல், பால் – 1/4 கப்
எண்ணெய்: ஜோஜோபா ஆயில், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
தேவையான எண்ணெய்: லாவண்டர், ரோஜா – 5 சொட்டு
ஒரு பாத்திரத்தில் தாவர எண்ணெய் மற்றும் மெழுகை சேர்த்து மெழுகு உருகும் வரை லேசான சூட்டில் சூடாக்கவும்.
பின் இறக்கி திரவ கேரியர் மற்றும் தேவையான எண்ணெய்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இக்கலவை கெட்டியாக குளிர்வித்து பின் சுத்தமான பாட்டிலில் காற்று புகாதவாறு மூடி வைக்கவும்.
தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் சருமத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம்.
