பால்ஸ்தீன விவகாரத்தில் பேக் அடிக்கும் இஸ்ரேல்..!! ஜோ.பைடன் முடிவு என்ன..?
பணய கைதிகளை உடனடியாக விடுவிக்கும்படி ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் ஹமாஸ் பயங்கரவாதிளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7- ஆம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ், வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், ஹமாஸ் அமைப்பினர் நிபந்தனைகள் எதுவுமின்றி பணய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, காசாவில் உள்ள மக்களின் நலன்களுக்காக மனிதநேய உதவிகள் விரைவாகவும் மற்றும் தடையின்றியும் கிடைக்க வேண்டும் என இஸ்ரேலுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி ஆதரவு தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புகளின் கொள்கைகளை பெரும்பாலான பாலஸ்தீனர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இஸ்ரேல் விரைவில் புரிந்துகொள்ளும் என அமெரிக்க அதிபர் ஜோ.பைடன் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இருந்து இஸ்ரேலின் வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும், இந்த தாக்குதல் நீட்டிக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
Discussion about this post