குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் நிஜப்பெயர் இது இல்லைனா..? அப்போ..?
இந்தியாவின் முதல் பழங்குடியின இனத்தை சேர்ந்த குடியரசு தலைவர் என்ற புகழையும்.., இரண்டாவது பெண் குடியரசு தலைவர் என்ற பெருமையும் கொண்டவர் “திரவுபதி முர்மு”
ஒடிசாவை சேர்ந்த ஊடகம் ஒன்று குடியரசு தலைவரான திரவுபதி முர்முவை சந்தித்து பேட்டி எடுத்துள்ளனர்.., அதில் பேசிய அவர் தனது நிஜப்பெயர் திரவுபதி முர்மு இல்லை என்றும் ஆசிரியர் ஒருவரால் தனது பெயர் மாற்றிகொண்டார் எனவும் கூறியுள்ளார்..
எங்கள் கிராமத்தை பொறுத்துவரை ஆண்குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரையும்.., பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரை வைப்பது வழக்கம் அந்த வகையில் என் பெயர் “சந்தாலி”
1960 களில் பழங்குடியின மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பாடம் கற்று தர வருவார்கள்.., அப்படி எனக்கு வந்த ஆசிரியர் ஒருவர் எனக்கு இந்த பெயர் எடுபடவில்லை வேறு ஒரு நல்ல பெயர் வைக்கப்போவதாக கூறினார்..,
பின் மகாபாரதத்தில் வரும் “திரவுபதி” என்ற பெயரை எனக்கு வைத்தார்.., காலபோக்கில் அது திரெளபதி என்றும் மாறியது. எனக்கு வங்கி ஊழியர் ஷியாம் சரணுடன் திருமணம் நடந்தது திருமணத்திற்கு பின் திரவுபதி முர்மு என மாறி.., தற்போது வரை மக்கள் என்னை திரவுபதி முர்மு என அழைக்கிறார்கள்