சூரிய ஒளி இவ்வளவு முக்கியமா..? தெரிந்து கொள்ளுங்கள்..!
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெயிலிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதாக கருதி, நம் உடலுக்கு விட்டமின் டி கிடைப்பதை நாமே தடுக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதனால் தான் அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பச்சிலம் குழந்தைகளை காலை வெயிலில் தினமும் காட்டுவார்கள் .
அது அறிவியல் ரதியாக சூரிய ஒளி பட வேண்டும் என்பது நிதர்சனமான உண்மை. விட்டமின் டி என்பது சூரிய ஒளியில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு சத்தாகும். ஆனால் நாம் வெயிலைக் கண்டு ஓடி ஒலிகிறோம்.
வெயில் நம் மீது படாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதாக கருதுகிறோம். ஆனால் இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு.
உடலின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு விட்டமின் டி என்பது முக்கிய தேவையாகும். இதனை சூரிய ஒளி இடமிருந்து மட்டுமே பெற முடியும். இந்த விட்டமின் டி நம் உடலுக்கு முழுமையாக கிடைக்காததால் பல்வேறு குறைபாடுகள் ஏற்படுகிறது.
கடந்த பல நாட்களாக விட்டமின் டி குறைபாடு இருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இன்றைய டிஜிட்டல் உலகிற்கு தொழில் நுட்பங்களுக்கு ஏற்றவாறு நம் உடலும் வாழ்க்கையும் பழகிவிட்டது நாம் இயற்கை வழிகளில் இருந்து சற்று விலகி செல்ல கற்றுக்கொண்டோம்.
இதில் இரண்டு வகைகள் உள்ளது, விட்டமின் டி2 விட்டமின் டி3 என்று அழைக்கப்படுகிறது . நாம் காலையில் வெளியே செல்வதற்கு முன்பாக வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க சன் ஸ்கிரீன் மற்றும் கை முகம் உரைகளை பயன்படுத்துகிறோம்.
இதனால் நம் உடலில் சூரிய ஒளி சரியாக படுவதில்லை அதனால் நம் உடலில் விட்டமின் டி குறைபாடு ஏற்படக்கூடிய அபாயத்திற்கு ஆளாகிறோம்.
நம் காலநிலை என்பது மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாறிக்கொண்டே இருக்கும் சில காலம் வெயில் காலமாகவும் சில காலம் மழைக் காலமாகவும் இன்னும் சில காலம் குளிர் காலமாகவும் இருக்கும் வெயில் காலத்தை தவிர மற்ற காலத்தில் நம்மால் சூரிய ஒளியை பெற முடிவது கடினம்.
அதனால் கோடை காலத்திலேயே தினமும் காலையில் 10 நிமிடங்கள் நம் மேல் சூரிய ஒளி படுவது போல் இருப்பது நல்லது. அல்லது மதியம் நேரத்தில் குறைந்த பட்சம் 10 முதல் 30 நிமிடங்களுக்கு சன் பார்த்து எனப்படும் சூரிய குளியலை மேற்கொள்ளலாம்.
விட்டமின் டி குறைபாட்டை தவிர்ப்பதற்கு பெரும்பாலும் சைவ உணவை எடுத்துக் கொள்பவர்கள் விட்டமின் டி குறைபாட்டிற்கு ஆளாவார்கள்.
அதனை தடுக்க அசைவ உணவுகளான மீன் மற்றும் மேன் எண்ணெய் முட்டை பால் பால் சார்ந்த பொருட்கள் மாட்டிறைச்சி கல்லீரல் போன்றவற்றில் மிகுதியாக உள்ளது அசைவ உணவை உண்பவர்கள் விட்டமின் டி குறைபாட்டில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..