ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக லைகா தயாரிப்பில் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் மற்றொரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி அல்லது ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்கள் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாகவும் அதன்பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இப்படங்களை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.