அமைச்சர் செந்தில் பாலாஜி சாதிக் பாட்ஷாவா..? ஆத்திரமான அமைச்சர் மா.சுப்பிரமணியம்..!!
பணமோசடி வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று முன் தினம் காவேரி மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.. அவர் குணமாக வேண்டும் என்று ஒரு சிலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலர் சமூக வலைத்தளத்தில் பல யூக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முக்கியமாக 2ஜி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக ஆ.ராசா அறிவிக்கப்பட்ட போது.., அவரின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
ஆ.ராசாவின் அனைத்து விவரங்களையும் சாதிக் பாட்ஷா தெரிந்துக் கொண்டதால் தான்.., அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் .. என பல எதிர் கட்சிகள் குற்றம் வைத்தனர்..,
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி கொண்டிருந்தார்.. அப்பொழுது செய்தியாளர் ஒருவர் சாதிக் பாட்ஷாவுடன் ஒப்பிட்டு சிலர் பேசுகிறார்களா..? என கேள்வி எழுப்ப..
அந்த மேடையிலேயே அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆத்திரமடைந்துள்ளார். பின் நீங்கள் எந்த செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர்.., நீங்கள் எந்த செய்தி நிறுவனத்தை சேர்ந்தவராக வேணாலும் இருக்கலாம் அது எனக்கு தேவையில்லை. நீங்கள் கேட்ட கேள்வி மற்றவர்களின் மனதில் ஏற்பட்ட கேள்வி அல்ல, உங்களுக்கும், உங்கள் செய்தி நிறுவனத்திற்கும் ஏற்பட்டிருக்கும் கேள்வி..
உங்கள் நிறுவனத்திற்கு வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால்.., உங்கள் நிறுவனம் சார்பிலேயே ஒரு மருத்துவரை அழைத்து சென்று செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் என்ன பிரச்சனை.., எத்தனை அடைப்புகள் அடைத்து இருக்கிறார்கள் என தெரிந்துக் கொண்டு. பின் அதை பற்றியும் செய்தி வெளியீடுங்கள்.
மற்ற சந்தேக பேர்வழி காரர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய என்ற அவசியம் தேவையில்லை.. என அந்த செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் கூறியுள்ளார்.
Discussion about this post