முதலமைச்சராக தொடர மம்தாவிற்கு தகுதி இருக்கிறதா..? மம்தா ஒரு பெண்ணா..? குஷ்பு அவதூறு கேள்வி..!!
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள “ஆர்.ஜி கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்” பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து., அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பெண் மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படிருக்கலாமோ என்ற நோக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக தொடர மம்தா பானர்ஜிக்கு தகுதி இல்லை என பாஜக மகளிர் அணி தலைவர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்..
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, இன்று நாடுமுழுவதும் பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியுள்ள ஒரு அதிர்ச்சி சம்பவம் “மேற்கு வங்கம் மாநிலத்தில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தான். மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்னைகள் நடக்கிறது.
அம்மாநிலத்தில் தற்போது ஒரே பெண் முதலமைச்சர் மம்தா பானர்ஜி., இருக்க, கொல்கத்தாவில் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு கிடைக்கும், அவர்கள் முன்னேறுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுப்பார்கள் என மக்கள் நம்பி ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கும் போது, பெண்களுக்கு எதிராக பல பிரச்னைகள் நடந்துகொண்டிருக்கிறது..
அதற்கான தீர்வும் இல்லை. பெண்களைப் பாதுகாப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கு வங்கம் முதலமைச்சர் மேற்கொள்ளவில்லை.
சந்தேஷ்காளி விவகாரத்தில் மம்தா பானர்ஜி அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க எவ்வளவோ விஷயம் செய்தார். மம்தா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு எப்படி நிம்மதியாக தூக்கம் வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
அந்த மருத்துவரின் உடலில் ஒவ்வொரு இடத்திலும் கடிக்கான தடயம் இருக்கிறது. ரோட்டில் தெருநாய்கள் கடித்தால் கூட அவ்வளவு கடி இருக்காது.
இவ்வளவு நடந்திருக்கும்போது, மருத்துவக்கல்லூரியின் முதல்வரைப் பாதுகாக்க என்ன செய்யமுடியுமோ அவை எல்லாவற்றையும் மம்தா செய்கிறார். அவர் எந்த மாதிரியான நடவடிக்கையும் எடுக்கின்ற மாதிரி தெரியவில்லை…
இந்தப் பிரச்னையெல்லாம் பார்க்கும்போது, மம்தா இன்னும் அங்கு முதலமைச்சராகத் தொடர வேண்டுமா..? பெண்களுக்குப் பாதுகாப்பாக நான் இருக்கேன் என்று சொல்வதற்கு மம்தாவுக்கு தகுதி இருக்கிறதா..? முதலமைச்சராக நீடிக்க தகுதியிருக்கிறதா..? தன்னை ஒரு பெண் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியிருக்கிறதா..? கொல்கத்தா உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகே சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குள் தடயங்களை அழித்துவிட்டார்கள்.
மம்தா பானர்ஜியிடம் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இருக்கிறதா? மாநில மக்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று முதல்வர் நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கிறார். அப்படி என்ன ஆசை அந்த பதவி மீது..? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..