மல்லிகார்ஜுன கார்கே தூங்குகிறாரா..? அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு..?
ஒரு அரசியல் பேசுவதற்காக எதை எதையோ பேசி முதல்வர் சிக்கலில் சிக்க போகிறார். திமுக வந்த பிறகு பொய் அதிகமாக பேச துவங்கி விட்டார்கள். ஆதாரம் இல்லாமல் அவதூறு பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.
நாங்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியிடும் வெள்ளை அறிக்கை அதிகாரிகளிடமும் கொடுத்து அந்த அறிக்கை பொய் என்று சொல்லட்டும் மேற்கொண்டு பார்த்துக் கொள்ளலாம். தமிழகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் சாலை என்று பார்த்தால் கோவை-கரூர் சாலை தான். எனவே விரைந்து சாலை பணிகளை முடிக்க வேண்டும் என்று நானே நேரடியாக இரண்டு முறை மத்திய அமைச்சரை சந்தித்து இருக்கிறேன்.
தற்பொழுது நிலம் கையகப்படுத்துவது தான் பிரச்சனையாக உள்ளது. இரண்டு முறை இந்த அரசு அந்த நிலம் கையகப்படுத்தும் Format யை மாற்றியது. இதே கோவையை சேர்ந்த எம்பி திட்டம் வரக்கூடாது என்று போராட்டமும் மேற்கொண்டார். தமிழக அரசியலுக்காக அதிகாரிகளை நியமித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதபடுத்த வேண்டும்.
DVAC நாங்கள் அளித்த 6 புகார்களை முழுங்கி ஏப்பம் விட்டு விட்டு அப்படியே வைத்துள்ளார்கள். PGR யை பற்றி நாங்கள் தொடர்ந்து கத்திக் கொண்டிருக்கிறோம். இன்று மாநில அரசும் வந்த காண்ட்ராக்ட் வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
பாஜக, திமுக கட்சியின் மீது மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது என்று குற்றம் சாட்டும் சீமான் அவரே அதிமுக ஊழல் பட்டியலை வெளியிடட்டுமே… நாங்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசுகிறோம் அதில் குற்றம் குறைகள் சொல்லலாம் ஆனால் சீமான் ஏதாவது வெளியிட்டுள்ளாரா என்பது தான் எங்களுடைய கேள்வி.
ISRO வை நேரு தான் ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியினர் பேசுகிறார்கள், நான் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை அனைத்து தலைவர்களும் நாட்டிற்கு தேவைதான்.
மோடி அரசை பொருத்தவரை எந்த துறைக்கு நிதி ஆதரவு கொடுக்க வேண்டுமோ அந்தத் துறைக்கு நாம் வழங்குகிறோம். ISRO விற்கு கடந்த 9 ஆண்டுகளில் 442 தனியார் சேட்டிலைட்டுகள் அனுப்பி உள்ளோம்.
அதில் 389 யை ISRO அனுப்பி உள்ளது. ISROவின் நிதி ஆதரவை மோடி உயர்த்தி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 70000 கோடி பெட்ரோல் சப்சடி இருந்தது. நம்முடைய அரசை பொருத்தவரை சப்சடி எங்கு தேவைப்படுகிறதோ அங்குதான் அளிக்கிறோம்.
சப்சடியை பொறுத்தவரை காங்கிரஸ் பார்வை வேறு பாஜக பார்வை வேறு. 2022ம் ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் மோடி 2023 டிசம்பர் மாதம் முடியும் பொழுது பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்று கூறினார். தற்பொழுது வரை 5,50,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே தற்பொழுது வரை தூங்கி விட்டு வேலை வாய்ப்பு என்பது ஒரு டிராமா என்று தற்பொழுது ட்விட் பதிவிடுகிறார்.
ராமநாதபுரத்தை பொறுத்தவரை இந்தியாவினுடைய மோசமான 112 மாவட்டத்தில் ராமநாதபுரம் ஒன்றாக உள்ளது. அதே போல தான் விருதுநகரும் உள்ளது. எனவே பிரதமருங்க நிற்க வேண்டுமென்று மக்கள் விருப்பப்படுகிறார்கள். இந்த முறை பாஜக ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..