பெட்ரோல் போட்தற்கு பணமா..? மதுபோத ஆசாமியால் வெடித்த சர்ச்சை..!!
ஆம்பூர் அருகே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டதற்கு 50 ரூபாய் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிவிட்டு 7 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு சென்ற மது போதை ஆசாமிகள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பானது
தற்போது ரவுடிகளின் மிரட்டல்., அராஜகத்தை விட கஞ்சாவிற்கு அடிமையாகி., ரவுடிகளாக உருவாகும் போதைக்கு அடிமையான இளைஞர்களே அதிகம்.. என சொல்லலாம்., மதுபோதையில் ரகளை., கஞ்சா போதையில் பாலியல் வன்கொடுமை மற்றும் வழிப்பறி என அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல தான் இந்த செய்தியும்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பாரத் பெட்ரோல் பங்கில். நேற்று மாலை நாயக்கநேரி பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த இருவர் பங்கில் பெட்ரோல் போட வந்து 50 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டுள்ளனர். பெட்ரோல் போட்டதற்கு பணம் கேட்ட பங்க் ஊழியரை மது போதையில் இருந்த அவர்கள் பணம் கொடுக்க முடியாது எனக்கூறி சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்..
அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மது போதை ஆசாமிகள் தாக்கியதில் காயமடைந்த பங்க் ஊழியர் குணசேகரனை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பங்கில் பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் ஏழாயிரம் ரூபாய் பறித்துக் கொண்டு சென்ற மது போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..