கொரோனா தொற்றின் பாதிப்பால் சர்வேதச அளவிலான கச்சா எண்ணையின் விலை ஏறியது. இதனால இந்தியாவில் கடும் பெட்ரோல் டீசல் விலை இதற்கு முன் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இந்நிலையில் கச்சா எண்ணெயின் விலை சரவேடச அளவில் குறைந்துள்ளதால் இந்தியாவிலும் விலை குறையும் என்று தெரிகிறது.
இந்தியா பெரும்பாலான எரிபொருளை 85 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. குறிப்பாக சவுதி அரேபியா, ஈராக், மற்றும் ரசியாவிடம் இருந்தே இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ரசியா உக்ரைன் போர் காரணமாக சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்தது. பீப்பாய் ஒன்றின் விலை 120 டாலரில் இருந்து 90 டாலராக குறைந்தது. மேலும் இந்த விலை குறையும் என்றே கூறப்படுகிறது.
இந்தியாவில் 150 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் தேஈசால் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்நது ஒரே விலையில் விற்பனை செய்யபட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால் இந்தியாவில் ரூபாய் 5 வரை விலை குறைய வாயப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. மேலும், இந்த விலைவாசியை கட்டு படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் கலால் குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.