வடகிழக்கு பருவ மழை தொடங்கிய முதல் தமிழகம் மற்றும் புதுவையில் பருவமழை பெய்து வருகிறது இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடும் குளிர் வீசி வருகிறது அதற்கான காரணத்தை தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கபட்டது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நகர கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது இதனால பெரும் மழை பெய்யாது என்று தெரிவிக்கபட்டது.
இந்நிலையில்தான் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் குளிர் வேசி வருகிறது இது குறித்து வானிலை வல்லுநர்கள் தெரிவிக்கையில், காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நிலவி வருவதன் காரணமாக சென்னையில் குளிர் நிலவி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததால் சென்னையில் குறைந்த வெப்பநிலை நிலவுகிறது மேலும் அதிகபடச்சமாக 25 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 22-23 டிகிரி செல்சிஸ் இருக்கும் என்றும் சென்னையில் குளுமையான வானிலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.