ஈரான் ஏவுகணை தாக்குதல்..!! ஐஆர்ஜிசி அறிக்கை..!! பெஞ்சமின் நெதன்யாகவுக்கு கொலை மிரட்டல்..!!
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்திய நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்., அதனை தொடர்ந்து இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகவுக்கு ஈரான் கொலை மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த ஒரு வருடதிற்கும் மேலாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடத்தப்பட்டு வரும் இந்த போரானது காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை போர் முடியாது என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
அதனை எதிர்த்து காசா மீது அடிக்கடி போர் தொடரும் இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர போர் நடத்தப்படும் பகுதிகளில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது..
அதுமட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் மற்றும் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியது., அதில் 3 ஆயிரம் பேர் காயமடைந்த நிலையில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து வடக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கோட்டையை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27-ம் தேதி லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஹசன் நஸ்ரல்லா உட்பட 44 பேர் பரிதாபமக உயிர் இழந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் தரைவழி தாக்குதலை நடத்தியது .
இதனையடுத்து இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட்ட நகரங்கள் மீது ஈரான் ராணுவம் அக்டோபர் 1ம் தேதி இரவு ஏவுகணை தாக்குதலை நடத்தினர்., அதற்கு இஸ்ரேல் ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது., அந்த அறிக்கையில் குறிப்பிடிருப்பதாவது “ஈரான் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது..
இந்த தாக்குதல் தீவிரம் அடையாமல் இருக்க அயன் டோம் சாதனங்களை உபயோகப்படுத்தி அந்த ஏவுகணைகளை இடைமறித்து முற்றலுமாக அழித்தோம்., அதில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்..
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், “ஈரான் ஏவுகணைகளை இடைமறித்து தாக்க இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவுமாறு அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டிருந்தேன். இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவாக உள்ளது. தேசிய பாதுகாப்புக் குழு இஸ்ரேல் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என கூறியுள்ளார்..
மேலும் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக தாக்குதல் நடத்தினால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்..
அதேபோல ஈரான் உளவு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்., எங்கள் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்திற்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம்., இனி இஸ்ரேலின் மீதுள்ள பாதுகாப்பு அமைப்பின் தலைவர்கள் மற்றும் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கட்டாயம் கொன்று விடுவோம் என ஈரான் உளவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை மிரட்டல் விடப்பட்டதை தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இஸ்ரேல் தலைமையின் கீழ் நேற்று நடைபெற்றது. மத்திய கிழக்கு பகுதியில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல் குறித்தும் இஸ்ரேல் தளபதியின் தாக்குதல்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது…