10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…!! பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்..!! விசாரணையில் வெளிவந்த பலடதிடுகிடும் தகவல்கள்..!!
சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோரை போலிஸ் இன்ச்பெக்டர் கொடுமை செய்துள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது….
சென்னை அண்ணா நகரில் வசித்து வரும் அஜிதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 10 வயது சிறுமி. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள்.,
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்., சிறுமியிடம் இதுகுறித்து விசாரணை செய்தபோது பக்கத்து வீட்டு 17 வயது சிறுவன் வினோத் தனக்கு விளையாட்டு சொல்லி தருவதாக கூறி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.. இதை பற்றி யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுமாறு மிரட்டியுள்ளதாக கூறியுள்ளான்..
இதனையடுத்து சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் வினோத் மீது புகார் அளித்துள்ளனர்.. ஆனால் அந்த புகாரை காவலர்கள் வாங்க மறுத்துள்ளனர்.., அத்தோடு அந்த சிறுவன் மீது வழக்கு பதிவிடக்கூடாது எனவும் மிரட்டி தகாத வார்த்தைகளில் பேசியதாக சொல்லப்படுகிறது..
இதனால் மனமுடைந்த சிறுமியின் பெற்றோர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.. இதனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். அதேபோல் சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் நேற்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது..
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள்., சிறுமி கொடுத்த வாக்கு மூலங்களை அடிப்படையாக கொண்டு காவலர்கள் வழக்கு பதிவிடாமல் இருப்பது.. ஏன்..? சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல் நடதப்பட்டுள்ள நிலையில் இந்த சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்..
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் கூறியதாவது., முதலில் தங்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றோம் ஆனால் காவலர்கள் புகாரை ஏற்காமல் நிராகரித்து அந்த சிறுவனை வரவழைத்து பணம் வாங்கி கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தி என் மகள் மீது தவறு உள்ளபடி பேசினார்கள்., இதனால் காவலர்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் எனவே சிபிஐ அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்கும் படி கேட்டுகொண்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..