ஈரான் நிலக்கரி சுரங்கம் வெடி விபத்து..! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!! மீட்பு பணிகள் தீவிரம்..!!
கிழக்கு ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 70 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது..
ஈரான் நாட்டின் தலைநகரமான தெஹ்ரானின் தென்கிழக்கில் இருந்து 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் நிலக்கரி சுரங்கத்தில் பல மாதங்களாக நிலக்கரி சுரண்டும் பணி நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் நேற்று திடிரென மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவு அதிகரித்த நிலையில் அதனை ஊழியர்கள் கட்டுபடுத்த முயற்சிதுள்ளனர்..
அப்போது நேற்று இரவு வாயு கசிவு அதிகரித்து அதனை கட்டுபடுத்த முடியாததால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.. அதில் 70 பேர் விபத்தில் சிக்கி தப்பிக்க முடியாமல் உயிர் இழந்துள்ளனர்.. இந்த சுரங்கத்தில் B மற்றும் C என இரண்டு பிரிவினராக வேலை பார்த்து வந்த நிலையில்., B பிரிவில் வேலை பார்த்த சுரங்க தொழிலாளிகள் விபத்தில் சிக்கியுள்ளனர்..
அப்போது வெடி சத்தம் கேட்டு அங்கு வந்த C பிரிவின் தொழிலாளர்கள்., இந்த விபத்து குறித்து., தீயணைப்பு துறைக்கும்., ஆம்புலன்ஸ் மற்றும் காவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.,
தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்., 70 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். மேலும் இந்த விபத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற நோக்கில் மீட்டு பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்..
மேலும் மீத்தேன் அடர்த்தி அதிகமாக இருந்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், தபாஸில் நிலக்கரி சுரங்க வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு பணிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..