ஆம்னி பேருந்தால் பரபரப்பான கிளாம்பாக்கம்..!!
கிளாம்பாக்கம் ஐயஞ்சேரி பிரதான சாலை அருகே ஆம்னி பேருந்து ஒன்று கட்டுபாட்டை இழந்து 4 கடைகள், 4 பைக் மற்றும் மின்கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் இங்கு வந்து செல்வதும்., கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படுவதும் வழக்கம்., வெளிபகுதிகளில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் கிளாம்பாக்கம் ஐயஞ்சேரி பிரதான சாலை வழியாக கிளாம்பாக்கதினுள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம்…
அப்படியாக இன்று அதிகாலை சென்னை கிண்டியில் இருந்து ஊட்டி நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கிளாம்பாக்கம் ஐயஞ்சேரி பிரதான சாலையின் உள்ளே வரும் போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஓட்டல், மெக்கானிக் கடை உள்பட 4 கடைகளுக்குள் புகுந்து அருகேயிருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது..
இந்த விபத்தில் ஓட்டல் உரிமையாளர்., உட்பட பேருந்தில் பயணித்த 21 பேரும் படுகாயம் அடைந்தனர்., மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த 4 பைக்குகள் மற்றும் கடைகள் பலத்த சேதமடைந்தது.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் விபத்தில் சிக்கி கொண்ட பயணிகளை ஏணி மூலம் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. மற்றும் பேருந்தை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மதுபோதையில் பேருந்தை ஓட்டியது தெரியவந்தது இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் டிரைவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் சேதமான ஆம்னி பேருந்தை கிரேன் உதவியுடன் அகற்றினர். அந்த பேருந்து மின்கம்பத்தில் மோதியதால் மின்கம்பம் முறிந்து விழுந்துள்ளது., இதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால் இன்று காலை முதல் அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின் இணைப்புகள் துண்டிக்கபட்டதால் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளிகியுள்ளனர்., மேலும் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..
நடைபாதை வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து டிரைவர் செல்வராஜ் (வயது 44) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கிளாம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..