சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் விதத்தில் உலக அளவில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாசாரத்தை சேர்ந்த பெண்களை குறிப்பிடும் வகையில் கூகுளின் சிறப்பு டூடுல் அமைந்துள்ளது.
மேலும், இந்த டூடுலில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் பல துறைகளை சார்ந்த பெண்கள் பற்றிய அனிமேஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.