இன்ஸ்டா காதல் மோகம்..! மதுரையில் பெண் உல்லாசம்.!! கணவன் செய்த செயல்.?
திருமணத்தை தாண்டிய உறவுகள் தற்போது சாதாரணமான ஆகிவிட்டது என சொல்லலாம் அதிலும் ஒரு சில ஜோடிகள் இன்ஸ்டா மற்றும் யூ டியூப்பில் வீடியோ போடுவது ரீல்ஸ் செய்வது என வளம் வருகிறார்கள்.
தற்போது காதல் ஜோடிகள் எந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார்களோ அதே அளவிற்கு கள்ள காதலர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது என சொல்லாம்.., அதில் ஒரு ஜோடியை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
கணவனுக்கு தெரியாம மற்றொரு ஆணுடன் நெருக்கமாக பழகியது மட்டுமின்றி அந்த ஆணை திருமணம் செய்து கொள்வதற்கு மதுரை வரை சென்றுள்ள பெண் தான் பிருந்தா.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த நந்தா (வயது -47) கூலித்தொழிலாளியான இவருக்கும் பிருந்தாவிற்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் 2 மகள் இருக்கிறார்., மகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
சமூக வலைத்தளங்கள் மீது ஆர்வமுள்ள பிருந்தா எப்பொழுதும் ரீல்ஸ் செய்வது மற்றும் அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது என இருந்துள்ளார்.. அப்போது சமூக வளைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார்.
ஆரம்பத்தில் நண்பராக பழகி நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.., திருமணம் ஆகி 2 மகள்கள் இருப்பதை மறைத்து பிருந்தா கள்ளகாதலுனுடன் தனிமையில் சந்தித்து பேசியுள்ளார்.., இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு பிருந்தா மதுரைக்கு சென்று கார்த்திக்குடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.., அந்த சமயத்தில் கார்த்திக்கை திருமணமும் செய்துள்ளார்.., இந்நிலையில் அந்த புகைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணையத்தில் வெளியானது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர் நந்தா இன்று காலை அந்த பெண் வீட்டிற்கு வந்ததும் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்றப்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நந்தா, பிருந்தாவின் தலையில் கல்லால் பலமாக தாக்கியுள்ளார்.
பின் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் பிருந்தாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.