இன்ஸ்ட்டா கள்ள காதல் மோகம்..! கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்..!
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் (30) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஹர்சிதா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் ஹர்சிதா இன்ஸ்டாகிராம் மூலமாக குண்டா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு போக போக இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் ஹர்சிதா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
மனைவி காணமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வீடு திரும்பிய ஹர்ஷிதா குண்டாவின் மீது உள்ள காதலால் பிரகாஷை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி கூலி படைகளை ஏவி தன் கணவரை கொலை செய்துவிட்டு விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துவிட்டதாக கூறி நடித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் விபத்து குறித்து ஹர்சிதாவிடம் விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்ததால் விசாரணையை தீவிர படுத்தினர். அப்போது கணவரை கூலி படை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் ஹர்ஷிதா மற்றும் கூலி படையை சேர்ந்த இருவர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகி உள்ள கள்ளக்காதலன் குண்டாவையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”