இன்ஸ்டா 2கே கிட்ஸ் காதல் கல்யாணம்..!! மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்ற போலிஸ்..!!
16 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவலர்கள் கைது செய்து வருகின்றனர்…
இப்போ இருக்கும் பசங்களின் காதல் என்றாலே பெரும்பாலும் சமூகவலைதளங்களில் பார்த்து பழகி பேசி., காதல் என சொல்லி கடைசியில் ஏமாற்றப்பட்ட பின்னர் அதை புகாராக கொடுத்து பெற்றவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள் நூற்றில் 90 சதவிகித காதல் செய்தி இப்படி தான் நாம் படித்து வருகிறோம் அதிலும் இப்போ இருக்கும் சிறுவர் சிறுமியர் பள்ளி படிகின்ற போதே காதல் என ஆரம்பித்து கடைசியில் ஏமாற்றம் அடைகிறார்கள்.., அப்படி தான் இந்த கதையும் நடந்து இருக்கு..
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எள்ளுப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சுதேசி (வயது 20) அதே கிராமத்தில் வாடகை ஆட்டோ ஓட்டிக்கொண்டு கிடைக்கும் வேலை செய்து வந்ததாக சொல்லபடுகிறது.
இவருக்கும் போளூர் கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி பவித்ரா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)., சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.. இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லபடுகிறது., அப்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்..
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். மேலும் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது..
இது குறித்து தகவல் அறிந்த போளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அல்லிராணி சுதேசியை போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்து, போளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.. மேலும் மாணவி பவித்ராவிற்கு அறிவுரைகள் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்..
இன்ஸ்டா காதலனை நம்பி பெற்றோரை விட்டு வீட்டை சிறுமி வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..