பாரத பிரதமர் அண்ணாமலையா..? வறுத்து எடுக்கும் நெட்டிஸைன்கள்..!
தமிழ்நாடு பாஜகவின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருந்த பதிவில் “பாரத பிரதமர்” அண்ணாமலை என பதிவிட்டுள்ளனர்.., அதை பார்த்த நெட்டிசைன்கள் அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் “என் நாடு என் மக்கள்” என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை குறித்து தற்போதைய அப்டேட்களை பாஜகவினர்.., சமூகவலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
இன்று காலையும் ஒரு பதிவை போட்ட பாஜக குழு “வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த மக்கள் விரோத ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு K.அண்ணாமலை அவர்கள் நல்லாட்சியை மூன்றாவது முறையாகத் தொடரச் செய்வோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. என பதிவிட்டுள்ளனர்.
இதனை கண்ட நெட்டிசைன்கள்., என்னது அண்ணாமலை பிரதமரா..? எப்பா உண்மையா தான் சொல்லுறிங்களா. இதை மேல் அதிகாரிகள் பார்த்த என்ன ஆகும் வேலையை போய்டுமே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..