அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி ஒரு கோடி மோசடி..! இளைஞர்களே உஷார்..!
தேனி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல இளைஞர்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார்,. இந்த மர்ம நபர். இதுவரை அரசாங்க வேலை வாங்கி தருவதாக கூறி ஜெயக்குமார் மற்றும் இருளன் என்ற நபர்கள் 1 கோடி வரை சேர்த்துள்ளனர்.
பணத்தை கொடுத்த பின் நீண்ட மாதங்கள் ஆகியும் வேலை பற்றி எந்த தகவலும் தெரியாததால்., ஜெயக்குமாரின் அலுவலகம் சென்று முற்றுகையிட்டுள்ளனர். அலுவலகத்தில் யாரும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்து இருப்போமோ என எண்ணிய மக்கள் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் மொபைல் என் மற்றும் புகைப்படங்களை வைத்து, பணத்தை மோசடி செய்த வழக்கில், இருளன் என்பவரை சில தினங்களுக்கு முன் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில், ஜெயக்குமார் என்பவரை இன்று காலை கைது செய்துள்ளனர், கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post