இந்தியாவில் 25 ஆண்டுகளாக தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் முதன் முறையாக தனது ஆப்பிள் ஸ்டோரை மும்பையில் இன்று திறந்துள்ளது.
சரியாக இன்று காலை 11 மணிக்கு மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்ட் டிரைவ் மாலில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோரை அதன் சிஇஓ டிம் குக் திறந்துவைத்தார்.
ஸ்டோர் திறக்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த ஏராளமானோர் கைகளை தட்டியும், கரகோஷம் எழுப்பியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏராளமான வாடிக்கையாளர்களுடன் டிம் குக் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 20ம் தேதி அன்று டெல்லியில் சாகேத் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிள் சாகேத் (Apple Saket) ஸ்டோரை டிம் குக் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான மாதுரி தீக்ஷித், ஷில்பா ஷெட்டி, ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post