2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா முடி சூடியுள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில்,மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 70-வது உலக அழகி போட்டி கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் நடைபெற்றது.
இப்போட்டியில்,அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ, வடக்கு அயர்லாந்து,இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.இந்தியா சார்பில்,ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி பங்கேற்றார்.
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா முடி சூடியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கரான ஸ்ரீ சைனி இரண்டாவது இடத்தையும், கோட் டி ஐவரியைச் சேர்ந்த ஒலிவியா யேஸ் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
மேலும், இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக மிஸ் இந்தியா வேர்ல்ட் 2020 பட்டம் வென்ற மானசா வாரணாசி முதல் 13 போட்டியாளர்களுள் ஒருவராக தகுதி பெற்றார். ஆனால் முதல் 6 இறுதிப் போட்டியாளர்களுக்குள் அவரால் தகுதி பெறமுடியவில்லை.
கடைசியாக 2017 இந்தியாவின் சார்பாக மாடல் நடிகை மனுஷி சில்லர் இந்த பட்டத்தை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.