4 ஆண்டு இளநிலை பட்டம் படித்தால் நேரடியாக முனைவர் படிப்பில் சேருவதற்கான திட்டத்தை யு.ஜி.சி. அறிமுகம் செய்துள்ளது.
முதுநிலை பட்டம் படிக்காமல் நேரடியாக முனைவர் படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகளை யு.ஜி.சி. அறிமுகம் செய்துள்ளது. இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் மற்றும் தொலைதூர கல்வி மூலமாகவும் படிக்கலாம்.
இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில் 4 ஆண்டுகால படிப்புகளும் துவங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.