நேபாள ஆற்றில் கவிழ்ந்த இந்திய சுற்றுலா பேருந்து..!! அதிகரித்த பலி எண்ணிக்கை..!! மராட்டிய அரசு வெளியிட்ட அறிக்கை..!!
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் பதிவெண் (UP FT 7623) கொண்ட பேருந்து ஒன்று 43 சுற்றுலா பயணிகளுடன் நேபாளத்திற்கு 10 நாட்கள் ஆன்மிக சுற்றுலா பயணமாக சென்றுள்ளனர்.
நேபாளத்தின் பிரபல சுற்றுலா தலமான பொக்காரா நகரில் இருந்து தலைநகர் காத்மாண்டு அடுத்த தனாஹுன் மாவட்டத்தில் நேற்று சென்றுள்ளது ஐனா பஹாரா என்ற இடத்தில் பயணித்து கொண்டிருந்தபோது, அந்த பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மர்சங்டி ஆற்றில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை நேபாள நாட்டின் காவல் துறை உறுதி செய்துள்ள நிலையில், இந்த கோர விபத்தில் சிக்கி 16 பேர் சம்பவ இடத்திலேயே நேற்று உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..
அதனையடுத்து ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த 25 பேர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து குறித்து நேபாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
41பேர் உயிரிழந்துள்ள நிலையில் அதில் 24 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டு நாளை நாசிக்கிற்கு கொண்டு செல்லப்படுவதாகவும்., மீதமுள்ள உடல்கள் அதற்கு மறுநாள் கொண்டு செல்ல இருப்பதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..