பஹால்காம் விவகாரத்தையடுத்து இந்தியாவில் இருந்து அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், ஒடிசாவில் பாலசோர் மாவட்டத்தில் பதான்மஹால் என்ற கிராமத்தில் வசிக்கும் ரஜியா சுல்தானாவை பாகிஸ்தானுக்கு செல்லும்படி நோட்டீஸ் அளிக்கப்பட்டடுள்ளது. இது, அவருக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ரேஷன் கார்டு, பான் கார்டு, ஆதார் அட்டை எல்லாம் இருந்தும் அவரை இந்தியாவில் இருந்து வெளியேற சொல்வது நியாயமே இல்லாதது என அவரின் மகன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் , ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான்கார்டு போன்றவை இந்திய குடியுரிமை கொண்டவர் என்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை என்று தெளிபடுத்தப்பட்டுள்ளது. இவை, நிர்வாக நலனுக்காக வழங்கப்படுபவை. ஆனால் இவை எதுவும் இந்திய குடியுரிமைக்கான திட்டவட்டமான ஆதாரங்களாக கொள்ள முடியாது., குடியுரிமைக்காக அரசாங்கம் அங்கீகரிக்கும் ஒரே ஆவணங்கள் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் மட்டுமே.
ஆதார் அட்டையை அடையாளம் மற்றும் வசிப்பிடத்திற்கான சான்றாகக் கருதுகிறது, ஆனால் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல. பான் மற்றும் ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தும் பான் கார்டுகள் வரி நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டுகள் உணவு பொருட்கள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.இவை இரண்டும் நீங்கள் இந்தியர்தான் என்பதை உறுதி செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியாது.
இந்தியக் குடியுரிமையைக் குறிக்கும் அடிப்படை ஆவணங்களாக ‘பிறப்புச் சான்றிதழ் மற்றும் ‘குடியிருப்புச் சான்றிதழ்கள்’ மட்டும்தான் இதனை 1969ம் ஆண்டு பிறப்பு மற்றும் இறப்புச் சான்றளிக்கும் சட்டம் உறுதி செய்துள்ளது. ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் வசிக்கிறார் என்பதை இருப்பிடச் சான்றிதழ்கள் உறுதிப்படுத்துகின்றன.
குடியுரிமைக்கான ஆதாரம் கட்டாயமாக்கப்படும் சூழ்நிலைகளில், உதாரணமாக அரசாங்க வேலை, பாஸ்போர்ட் வாங்க போன்றவற்றுக்கு பிறப்பு சான்றிதழ், குடியிருப்பு சான்றிதல் கட்டாயமாகும். எனவே, குடிமக்கள் பிறப்பு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ்களை முறையாக பெற்று வைத்திருப்பது விவேகமானது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.