இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. ஹைபிரிட் மாடலில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இலங்கையில் உள்ளது. உலகக்கோப்பை நெருங்குவதால், சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 10 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பினார். இந்நிலையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தயாராகி வந்த சூழலில், திடீரென நட்சத்திர வீரர் பும்ரா நேற்று அவசர அவசரமாக மும்பைக்கு சென்றார். அதன் பின்பு தான் தெரிந்தது பும்ராவின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.
இந்நிலையில், இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பகுதியில் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில்
’’எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் மகன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம்…’’ என பும்ரா குறிப்பிட்டுள்ளார். இவருக்கு சக வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
How useful was this post?
Click on a star to rate it!
Discussion about this post