வைரலாகும் புகழின் போஸ்ட்..!! குவியும் வாழ்த்துக்கள்..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் பிரபலம் ஆனவர் “புகழ்” இதற்கு முன் விஜய் டிவியில் பல நிகழ்ச்சியில் நடித்து இருந்தாலும் குக் வித் கோமாளி தான் இவர் யார், இவரின் திறமைகள் என்ன என வெளிப்படுத்தியது.
குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் தனது காமெடி நடிப்பின் மூலம் தான் ஒரு நடிகர் என்று வெளிப்படுத்தினார், அதிலும் அவர் போடும் பெண் கெட்டப் தனி சிறப்பு ரம்யா பாண்டியனுடன் இவர் சேர்ந்து நடித்து பலரையும் கவர தொடங்கினார்.
குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் தனக்கென்று அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றார், எங்கும் புகழ் புகழ் என்று ஒலிக்கும் சத்தம்.. அவரின் அசாத்திய நடிப்பு, நகைச்சுவை வசனம் பலரையும் கவர்ந்தது மட்டுமின்றி பல பட வாய்ப்புகளும் கிடைத்தது.
குக் வித் கோமாளி சீசன் 3 யில் “பென்ஸி” என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், காதல் திருமண வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் இவர்கள் முதல் திருமண நாள் இன்று.
அதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ் போஸ்ட் செய்துள்ள படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது மட்டுமின்றி பலரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.
என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள்… இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இந்த பதிவு பலரையும் கவர்ந்துள்ளது.
Discussion about this post