ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை வெற்றி..! வெற்றியின் சீக்ரெட்டை பகிர்ந்த மனு பாக்கர்..!
பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவில் “மனு பாக்கர்” வெண்கல் வென்றுள்ளார். அதற்கு முன்பு இந்தியா சார்பில் களமிறங்கிய ஆண்களே துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற நிலையில், மனு பாக்கர் அந்த வரலாற்றை முறியடித்துள்ளார்.
வெறும் 0.1 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆண் வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தைத் தவறவிட்டனர்…
துப்பாக்கி சுடுதல் :
கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு 12 ஆண்டுகள் இந்தியாவுக்குத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் எதுவும் கிடைக்காத நிலையில், அதையும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் கடைசியாக 2012ம் ஆண்டு லண்டன் பதிப்பில் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கங்களை வென்றது..
அதன்பின் அங்கேயே ரேபிட் ஃபயர் பிஸ்டல் ஷூட்டர் விஜய் குமார் மற்றும் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் வீரர் ககன் நரங் முறையில் வெள்ளி மற்றும் வெண்கலம் பதகங்கள் வென்றனர்.
ஒரு வெண்கலத்துடன் இந்திய அணி இப்போது 17வது இடத்தில் இருக்கிறது. இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிகளில் தான் பதக்கம் வெல்ல பகவத் கீதை காரணமாக இருந்துள்ளதாக மனு பாக்கர் கூறியுள்ளார்.
அதிக பதக்கங்கள் :
அது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தியாவிற்கு நீண்ட காலமாக கிடைக்க வேண்டிய பதக்கம் இதுதான் நான் அதற்கு ஒரு கருவியாக மட்டுமே இருந்து நான் தற்போது முயற்சி எடுத்து பதகத்தை வென்றுள்ளேன்.
இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களைப் பெற காத்திருக்கிறது. இந்த முறை அதிக பதக்கங்களை வெல்ல முடியும் என நம்புகிறோம்.
தனிப்பட்ட முறையில் என்னால் இது நம்பவே முடியவில்லை. நான் கடைசி ஷாட் வரை நம்பிக்கையைக் கைவிடவில்லை.. தொடர்ந்து முயற்சித்தேன். இந்த முறை வெண்கல பதக்கம் எனக்கு கிடைத்துள்ளது அடுத்த முறை நான் கட்டாயம் “தங்கம் வெல்வேன்” அதற்காக நான் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன்.