ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் குவியும் பக்தர்கள்..!
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை வந்தாலும் தை கிருத்திகை, கார்த்திகை மாதத்தில் வரும் கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
ஆடி கிருத்திகை நாளில் முருகனை பெருமானை வழிப்பட்டால் திருமணம், பதவி உயர்வு, குழந்தை வரம் உட்பட கேட்ட வரங்கள் அத்தனையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தநிலையில் உலகம் முழுவதும் நாளை ஆடி கிருத்திகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முருகனின் ஆறு படை வீடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டு, பூஜைகள் நடைப்பெறும். குறிப்பாக திருத்தணி முருகன் கோவிலில் நாளை ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் வருகைக்காகவும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய பல சிறப்பு ஏற்படுகள் முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வழிபாட்டுக்காக வரும் பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் ஏந்தியும் கோவில்களுக்கு பாதயாத்திரையாக படை எடுத்து வருகின்றனர்.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணியில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
-பவானி கார்த்திக்