ஜம்மு காஷ்மீரில் தொடர் முன்னிலையில் இந்திய கூட்டணி..!! தற்போதைய தேர்தல் நிலவரம்..!!
ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.. இன்று காலை முதல் இந்திய கூட்டணி தொடர் முன்னிலையில் இருக்கிறது..
ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. முக்கியமாக ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலமானது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது..
நடந்து முடிந்த சட்டப்பேரவையின் தேர்தல் வாக்கு எண்ணிக்கைகள் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது..
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் தேசிய மாநாடு கட்சியும், கூட்டணியுடன் போட்டியிட்டுள்ளது. அதேபோல் பாஜகவும், மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட்டுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் – தேசிய மாநாடு கட்சி கூட்டணி பெரும்பான்மைக்கு சற்று குறைவாக 43 இடங்களிலும், பாஜக 27, மக்கள் ஜனநாயக கட்சி 7, மற்றவர்கள் 13 இடங்களிலும் வெற்றி பெறும் என ஜம்முகாஷ்மீர் நடத்திய கருத்து கணிப்பு சொல்கிறது..
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதன்படி, இந்தியா கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வருகின்றது. காங்கிரஸ் -தேசிய மாநாட்டு கட்சி 45 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், பிடிபி 5 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.. எனவே இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..