இந்தியா கூட்டணி ஆட்சி அமையும்..! மம்தா பானர்ஜி அதிரடி..!
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் ஜூன் 2ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், “இந்தியா கூட்டணி” 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம் பாஜக தனியாக 240 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றி 2-வது பெரிய கட்சியாகவும், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றி 3-வது பெரிய கட்சியாகவும் உள்ளன.
இந்தியா கூட்டணி நாளையே ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரக்கூடும் என மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் கூட்டம் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி,
‘‘நாட்டிற்கு மாற்றம் தேவை. நாடு மாற்றத்தை விரும்புகின்றது. இந்த ஆணை மாற்றத்திற்காக வழங்கப்பட்டது. நாங்கள் காத்திருக்கிறோம் மற்றும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். மக்கள் வழங்கிய இந்த ஆணை நரேந்திரமோடிக்கு எதிரானது.
எனவே அவர் இந்த முறை பிரதமராக வரக்கூடாது. ஜனநாயக விரோதமாகவும், சட்டவிரோதமாகவும் பாஜக ஆட்சி அமைக்கிறது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்று உரிமை கோரவில்லை என்றால் நாளை உரிமை கோராது என்று அர்த்தமல்ல. கொஞ்சம் பொறுத்திருப்போம். மத்தியில் இந்த நிலையற்ற மற்றும் பலவீனமான அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியே சென்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.
– லோகேஸ்வரி. வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..