India to buy advanced 29B6 radars from Russia
புது டில்லி: நமது இந்தியாவிடம் எஸ் 400 போன்ற சிறப்பான மற்றும் அதிநவீன ஏவுகணை மறிப்பு சிஸ்டம் இருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து மேலும் சில அதிநவீன புதிய ஏவுகணை மறிப்பு சிஸ்டம்கள் மற்றும் அதிநவீன ரேடார்களை இந்தியா வாங்க உள்ளது. முக்கியமாக ஸ்டெல்த் விமானங்கக் கூட கண்டுபிடிக்கும் அதிநவீன ரேடார் சிஸ்டங்களை இந்தியா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. India to buy advanced 29B6 radars from Russia
இந்தியா-ரஷ்யாவுக்கு இடையேயான (G2G) ஒப்பந்தத்தின் மூலம் மேம்பட்ட ஓவர்-தி-ஹாரிஸன் (OTH) ரேடார் அமைப்பை சேர்ந்த “கன்டெய்னர்-S” ரேடார்களை, குறிப்பாக 29B6 “கன்டெய்னர்” ரேடாரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் ரஷ்யாவும் தொடங்கியுள்ளன. ஸ்டெல்த் விமானங்களை கண்டுபிடிக்கும் வகையில் இந்த ரேடார் சிஸ்டங்களை இந்தியா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதிநவீன ரஷ்ய OTH ரேடார் அமைப்பான Container-S ரேடார், நீண்ட தூர வான்வெளி கண்காணிப்பு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை கண்டறிதலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கண்டறிதல் தூர வரம்பைக் கொண்ட இந்த அதிநவீன ரேடார் இந்திய வான்பரப்பு முழுவதையும் எஃகு போல பாதுகாக்குமாம்.
வழக்கமான ரேடார் அமைப்புகள் கண்டுபிடிக்க முடியாத தூரங்கள் மற்றும் உயரங்களில் கூட இந்த ரேடாரால் கதிர்களை செலுத்த முடியும். இது ஸ்டெல்த் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை அடையாளம் காணும் திறன் கொண்டது. ரஷ்யாவின் மொர்டோவியாவில் உள்ள கோவில்கினோ அருகே அமைக்கப்பட்டு உள்ள முதல் Container-S ரேடார், டிசம்பர் 2013ல் செயல்பாட்டுக்கு வந்தது. 2019ல் உக்ரைன் போரில் ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. India to buy advanced 29B6 radars from Russia
இந்த ரேடாரைத்தான் இந்தியா வாங்க உள்ளது. கண்டெய்னர்-எஸ் ரேடார், அல்லது 29B6, என்பது உயர் அதிர்வெண் (HF) பேண்டில் இயங்கும் ஒரு OTH ரேடார் ஆகும், இது மேற்பரப்பு அலை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனால் எந்த ஒரு விமானத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் வான்வழி இலக்குகளைக் கண்டறிந்து, சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சீனாவிடம் ஸ்டெல்த் விமானங்களை வாங்க முடிவெடுத்த நிலையில்தான் இந்தியா இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-35A-ஐ பாகிஸ்தானுக்கு விற்க உள்ளது. இதற்கான பணிகளை சீனா வேகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரம் முன் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து சீனா மற்றும் பாகிஸ்தான் மேலும் நெருக்கமாகி உள்ளன. இரண்டு நாடுகளின் உயர்மட்ட தூதரக வட்டாரங்கள் கடந்த சில நாட்களுக்கு சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டன. India to buy advanced 29B6 radars from Russia
இந்தியா பாகிஸ்தான் போருக்கான வெகுமதி இந்த விமானம் என்று சீனா அரசு தரப்பு பாகிஸ்தானிடம் கூறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தற்போது சீனாவில் உள்ளார். ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து 30 J-35A ஜெட் விமானங்களின் முதல் தொகுதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் விமானப்படையை மேலும் பலமாக்கும் வகையில் இந்த விமானங்கள் அனுப்பப்பட உள்ளன. சீனா இந்த போர் விமானங்களில் பாகிஸ்தானுக்கு 50% தள்ளுபடியையும், எளிதான கட்டண விருப்பங்களையும் வழங்கியுள்ளதாக உயர்மட்ட தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அதாவது கடனுக்கு விமானங்களை வாங்கிவிட்டு பின்னர் குறைந்த வட்டியில் கடனை திருப்பி தரலாம் என்பதுதான்.
பாகிஸ்தான் விமானப்படையின் இந்தியாவிற்கு எதிரான செயல்திறனுக்கான வெகுமதியாக இந்த நடவடிக்கையை சீனா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் நவீன ஜெட் போர் விமானங்களில் இதுவும் ஒன்று. சீனா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களான J-35Aஐ பெறுவதன் மூலம் பாகிஸ்தான் விமானப்படை புதிய வலிமையை பெறுகிறது.
பாகிஸ்தான் சீனாவிடம் ஸ்டெல்த் விமானங்களை வாங்க முடிவெடுத்த நிலையில்தான் இந்தியா இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. India to buy advanced 29B6 radars from Russia