“இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு அவசியம்..” அமைச்சர் ஜெய்சங்கர்..!!
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக திகழும் மாலத்தீவின் பங்கு இன்றியமையாதது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளார்
அட்டு நகர கடற்கரை மறுசீரமைப்புத் திட்டம் மற்றும் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதிக்கான வங்கியின் நிதியுதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள மாற்று இணைப்பு நான்கு வழிச் சாலை ஆகியவற்றின் தொடக்க விழாவில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சா் மூஸா சமீா் மற்றும் ஜெய்சங்கா் பங்கேற்றனா்
அப்போது பேசிய ஜெய்சங்கா், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் கொள்கையிலும் இந்தியாவின் மிக முக்கிய நட்புறவு நாடாக மாலத்தீவு திகழ்வதாகவும் சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
மேலும், ஒட்டுமொத்தமாக இந்திய உதவியுடன் மாலத்தீவில் 65 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் 12 திட்டங்கள் நிறைவடைந்தாகவும் இந்த திட்டங்கள் மூலம் மாலத்தீவின் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்
அந்தவகையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக திகழும் மாலத்தீவின் பங்களிப்பு இன்றியமையாதது என்றார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..