Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா..!! எடப்பாடி எடுத்தது சபதம் அல்ல வெறும் வாய் சவடால்..!! நெல்லையில் முதலமைச்சரின் மாஸ் பேச்சு..!!

பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம் என அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும். பாஜகவிற்கு வாக்களிப்பது வருங்கால தலைமுறையினருக்கு நாம் செய்யும் துரோகம்.

by logeshwari
March 26, 2024

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா..!! எடப்பாடி எடுத்தது சபதம் அல்ல வெறும் வாய் சவடால்..!! நெல்லையில் முதலமைச்சரின் மாஸ் பேச்சு..!!

 

 

 

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாமக, மதிமுக, தேமுதிக, பாஜக, மற்றும் நாதகவின் அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

திருநெல்வேலி பிரச்சாரம் :

அந்த வகையில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ், விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோரை ஆதரித்து திருநெல்வேலி நாங்குநேரி அருகே தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை மதிக்கும், தமிழர்களை மதிக்கும் ஒருவர் பிரதமராக வேண்டும். அது மக்களாகிய உங்களின் கைகளில் தான் உள்ளது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும். மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதி பூங்காவாக இருக்கும் இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மணிப்பூர் கலவரம். மணிப்பூர் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

மத்திய அரசு மீது வழக்கு :

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்பு விதைகளைத் தூவி நாசம் செய்துவிடுவார்கள். தேர்தல் சமயங்களில் மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது எங்கே சென்றார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்யவில்லை.

அதன்பின் 2 இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து வட மற்றும் தென்மாவட்டங்களைத் தாக்கிய போது நிவாரணநிதி கொடுக்கவில்லை. மத்திய அரசு எங்களுக்கு நிதி அளிக்காத நிலையில் கூட, மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்தோம். திமுக அமைச்சர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று தேவையான உதவிகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்றினார்கள்.

நிதி கொடுக்கா விட்டால் கூட, ஆறுதலாவது சொல்லி இருக்கலாம். வெள்ள பாதிப்புகளைச் சரி செய்ய 37 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டும் மத்திய அரசு தர மறுத்து விட்டது. வெள்ள பாதிப்புகளுக்கு நிதி அளிக்காத மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெறுப்பைப் அளிக்கும் மத்திய அரசு :

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியும் அளிக்காமல், மாநில அரசிற்கும் கொடுக்காமல் நிதியைப் பிச்சை என்று கூறினார். அதாவது மக்களைப் பிச்சைக்காரர்கள் என கூறுகிறார்.

அரசு, மக்களுக்குச் செலவு செய்யும் பணம் அனைத்தும் மக்களுக்குரியது, ஆகையால் மக்களுக்குச் செலவு செய்கிறோம். பணத்தைப் பெறுவதற்கான முழு உரிமையும் மக்களுக்கு உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே எப்போதாவது மக்களை நேரடியாகச் சந்தித்து இருக்கிறீர்களா?. மக்களை ஒருமுறை சந்தித்துப் பாருங்கள் பிச்சை என்ற வார்த்தை இனி மனதிலேயே வராது. மத்திய நிதியமைச்சர் தமிழக மக்களை பிச்சைக்காரர் என்கிறார். இன்னொரு மத்திய அமைச்சர் தமிழக மக்களைத் தீவிரவாதி எனச் சொல்கிறார். வெறுப்பு வன்மத்தைப் பரப்பும் அமைச்சர்களாக மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் :

பாஜகவிற்கு வாக்களிப்பது அவமானம் என அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும். பாஜகவிற்கு வாக்களிப்பது வருங்கால தலைமுறையினருக்கு நாம் செய்யும் துரோகம். தேர்தலுக்காக மட்டுமே தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி அவர்களே, தமிழ்நாட்டிற்கென எந்த சிறப்புத் திட்டத்தை நீங்கள் செய்துள்ளீர், கடந்த 10 ஆண்டுகளில் என்ன சாதித்தீர்கள்.

தமிழக மக்கள் கட்டும் 1 ரூபாய் வரிக்கு 29 பைசா திருப்பித்தரிங்க , அதை பற்றி கேட்டா கூட பதில் அளிக்கமாட்டீங்க. எதை கேட்டாலும் வாயால் வடை சுடுரீங்க மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, 69 சிறப்பு திட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியது.

ஆனால் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வெறுக்கின்ற மோடி போன்ற ஒரு பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை பார்த்தது கிடையாது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து 10 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இன்னும் கட்டியப்பாடு இல்லை.

ஆனால் அதே மதுரைக்கு திராவிட மாடல் அரசு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டித்தருவோம் என அறிக்கை விடுத்து 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தோம். ஆனால், பிரதமர் மோடி அபத்தமான குற்றச்சாட்டைக் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

இலங்கையை பார்த்து பயப்படும் மோடி :

கடந்த 10 ஆண்டில் பாஜக ஆட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்துள்ளார்கள் தமிழக மீனவர்களின் கைதை கண்டிக்க பிரதமர் மோடி எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதற்கு அவருக்கு தைரியமும் இல்லை.

இலங்கையைக் கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்களுக்கு செய்தது எல்லாம் மீனவர்கள் மீதான தாக்குதல், கைது போன்ற செயல்கள் மட்டுமே செய்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி :

நேருவைத் திட்டுவது, சோனியா காந்தியை வசைபாடுவது, ராகுல் காந்தியை விமர்சிப்பதை மட்டும் வேலையாக நினைத்து காங்கிரசிற்கு ஆதரவு அளிப்பவர்கள் மீது அமலாக்கதுறையை  வைத்து ரைடு நடத்துவது மட்டுமே மோடிக்கு தெரியும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகத்தின் மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை அழிந்துவிடும். ஆனால், எதுகுறித்தும் கவலைப்படாமல் வளைந்த முதுகோடு பாதம் தாங்கி எடப்பாடி பழனிச்சாமி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிரதருக்கு வசைபாடும் எடப்பாடி :

பிரதமர் பற்றியும், பாஜக பற்றியும், எடப்பாடி பழனிசாமி ஒருவார்த்தை கூட பேசவும் இல்லை, பேசுவதற்கும் துப்பில்லை. பாஜகவிற்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார். அதற்கு பெயர்தான் கள்ளக் கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமில்லை அதிமுக தொண்டர்கள் கூட மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர்.

குடியுரிமைச் திருத்த சட்டம் :

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்ததைக் கண்டித்து கையெழுத்து இயக்கத்தை நடத்திய போது, திமுகவைப் பார்த்து எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள் என பாஜகவின் டப்பிங் வாய்ஸாக எடப்பாடி பழனிசாமி பேசினார்.

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் எனச் சபதம் எடுத்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒற்றை விரலால் தமிழக மக்களின் கண்களைக் குத்தியுள்ளார். அவர் எடுத்தது சபதம் அல்ல வெறும் வாய் சவடால். சர்வாதிகார ஆட்சியாளர்களைத் தலைதூக்கி விடலாமா? எப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்து நாம் எப்படி மீண்டோம் என்பதை மறக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் நான் முதலமைச்சரான பின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய ரயில்வே கோட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். ஆனால் பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு தமிழ்நாட்டிற்கு வைக்கும் வேட்டு. பாஜக – அதிமுக ஆகியோரை ஒன்று சேர்ந்து வீழ்த்துவோம். உங்களுக்கான பிரதமரை தேர்வு செய்யும் நேரம் இது என நெல்லையில்  மக்களின்  முன்  முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாரே பேசினார் .

Tags: #CM Mk Stalin Campaign#mkstalin#தேர்தல் பிரச்சாரம்#நாடாளுமன்ற தேர்தல் 2024எடப்பாடி பழனிசாமிதிருநெல்வேலி பிரச்சாரம்பாஜகமணிப்பூர் கலவரம்
ADVERTISEMENT

Related Posts

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

அரசியல்

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

Next Post

காஸாவில் நிறுத்தப்பட்ட போர்..!! போரில் அமெரிக்கா பின் வாங்க இது தான் காரணமா..? ஐநா தீர்மானம்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.