“உணவு பாதுகாப்புக்கான தீர்வை கண்டுபிடித்துள்ள இந்தியா..” பிரதமர் மோடி நெகிழ்ச்சி..!
இந்தியா பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உபரி நாடாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் விவசாய அறிவியல் மையத்தின் 32வது சர்வதேச வேளாண் பொருளாதார நிபுணர்களின் சர்வதேச சங்க விழாவைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், 65 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இதுபோன்ற ஒரு மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் இந்தியா பெரிய அளவில் உற்பத்தி செய்யும் உபரி நாடாக திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இந்த பன்முகத்தன்மை தான், உலகத்தின் உணவு பாதுகாப்புக்கான நம்பிக்கைக் கதிராக இந்தியா திகழ்கிறது. பெரிய அளவில் பால், பருப்பு உற்பத்தி மூலம் இந்தியா உணவு உபரி நாடாக திகழ்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் உணவு பாதுகாப்பு சர்வதேச கவலையாக இருந்தது. இன்று உலகளாவிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுக்கான தீர்வை இந்தியா கண்டுபிடித்துள்ளது.
உணவு மற்றும் விவசாயத்திற்கான நமது பாரம்பரியம் மற்றும் அனுபவங்கள் நம் நாட்டைப் போலவே பழமையானவை எனவும் விவசாய பாரம்பரியத்தில் அறிவியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றுடன் ஊட்டச்சத்து ஒரு பெரிய சவாலாக உள்ளதாகவும் ஆனால் அதற்கு இந்தியாவில் தீர்வு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..