வயநாடு நிலச்சரிவு.. பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள்.. தாய்ப்பால் தர முன்வந்த பெண்..
சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் உள்ள மலை பகுதிகளான முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நள்ளிரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள், மண் உள்ளிட்டவைகள் நீரில் அடித்து செல்லபட்டன.
இதன் காரணமாக சூரல்மலை, முண்டக்கை,மேப்பாடி ஆகிய கிராமங்கள் வேறோடு அழிந்து உள்ளது.பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர்.
இவர்களை தேடும் பணி 5வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. பலி எண்ணிக்கையும் 344ஆக உயர்ந்துள்ளது. வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதரியாமல் பாதிக்கப்பட்டவர்கள் நிற்கின்றன.
இவர்கள் இச்சோகமான துயரத்தில் இருந்து மீண்டு வருவதற்காக பலரும் உநவிகரம் நீட்டியுள்ளனர். இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஓருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த பதிவில் , “பச்சிளம் குழந்தைகள் யாருக்காவது தாய்ப்பால் தேவைப்பட்டால் என்னை அணுகுங்கள். என் மனைவி தாய்ப்பால் தானம் அளிக்கத் தயாராக உள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
-பவானி கார்த்திக்