வீட்டில் எந்த திசையில் தீபம் ஏற்ற வேண்டும்..? எந்த எண்ணையில் ஏற்ற வேண்டும்..?
வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் விளக்கு ஏற்றும் முன் இதை செய்ய மறக்காதீர்கள்.
பூஜை சாமான்கள் சுத்தமாக துளக்கி.., மஞ்சள் குங்குமம் வைத்துக்கொள்ள வேண்டும்.
வீட்டை சுத்தமாக துடைத்து மஞ்சள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
வாசலின் இரு புறமும்.. எழும்பிச்சை பழத்தை வெட்டி இருபுறமும் வைக்க வேண்டும்.
வாசலின் மேல் பகுதியில்.., வேப்பிலையில் மாலை கட்டி இட வேண்டும்.
இவ்வாறு செய்தால் வீட்டில்.. துஸ்ட சக்திகளை வர விடாது.., என்றும் இஷ்ட தெய்வம் துணை இருக்கும்.
திசைகளில் தீப பயன்கள் :
குத்துவிளக்கை கிழக்கு முகம் பார்த்தவாறு ஏற்றினால் துன்பங்கள் நீங்கி வசீகரம் அதிகரிக்கும்.
மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும், செல்வம் உண்டாகும்.
அதேபோல், தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
எந்த எண்ணையில் என்ன பயன் :
பசு நெய்- செல்வம்.
நல்லெண்ணெய்- உடல், ஆரோக்கியம்.
விளக்கெண்ணெய்- புகழ், தாம்பத்திய சுகம்.
இலுப்பெண்ணெய்- ஜீவ சுகம், ஞானம்.
புங்க எண்ணெய்- முன்னோர்களின் ஆசி.
இந்த ஐந்து வகையான எண்ணெய்களை கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் அனைத்து நன்மைகளும், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..