இன்னிக்கு ஸ்நாக் தேங்காய் ரவா லட்டு..!
நெய்
முந்திரி – 2 மேசைக்கரண்டி
திராட்சை
ரவை – 2 கப் (250 மி.லி)
துருவிய தேங்காய் – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
காய்ச்சி ஆறவைத்த பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை வறுத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து ரவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் நெய்யில் தேங்காயை வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் வறுத்த ரவை கலந்து அதில் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து காய்ச்சியை பாலை விட்டு கலக்கவும்.
கடைசியில் நெய்,ஏலக்காய்த்தூள்,வறுத்த முந்திரி,திராட்சை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின் அந்த கலவையை ஒரு தட்டில் மாற்றி, உள்ளங்கையில் நெய் தடவி கலவை சூடாக இருக்கும் போதே கையில் உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் தேங்காய் ரவா லட்டு தயார்.