முதன்முறையாக திருமண மண்டபத்தில் நடந்த வேளாண் திருவிழா..
கரூரில் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு, நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவோம் (வாகைம்) ஜே சி ஐ கரூர் டைமண்ட் மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து நடத்தும் கரூர் இயற்கை வேளாண் திருவிழா 2024 ஆண்டிற்காக நடைபெற்றது.
இதில் 1500 பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது,முன்னுருக்கும் மேற்பட்ட காய்கறி பல வகைகள் விதைகள் காட்சிப்படுத்தப்பட்டது, NO BOIL, NO OIL மற்றும் சிறுதானிய உணவுகள் காட்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பார்வையிட்ட கரூர் காந்திகிராமம் பகுதியைச் சார்ந்த இந்திரா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது இயற்கை விவசாயம் இயற்கை உணவுகள் பற்றிய வாய்ப்பு கிடைத்தது பல்வேறு தகவல் கிடைக்கப்பெற்றது.
தனது அம்மா காலத்தில் கண்கூட பார்த்திருக்கின்றனர் எங்களுக்கு அதுபோன்ற அறிவாற்றல் இல்லை அரிசி வகைகளில் எத்தனை வகைகள் உள்ளது என்பது எங்களுக்கு தெரியாத நிலையாக உள்ளது.
இது போன்ற இயற்கை விவசாய கண்காட்சிகள் நடைபெறும் பட்சத்தில் அதை தெரிந்து கொண்டோம். சிறுதானியத்தில் பிஸ்கட் போன்ற பல்வேறு வகைகள் வருகின்றனர் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளனர்.
உணவு தயாரிக்கும் முறைகள் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை இது போன்ற விவசாய கண்காட்சிகள் வைக்கும் பொழுது குழந்தைகள் நேரடியாக பார்க்கும் பொழுது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்கின்றனர்.
ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்கின்றனர். இதேபோன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று வேளாண் கண்காட்சிகள் நடைபெறும் பட்சத்தில் இயற்கையை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள்.
அரிசி என்பது சிறுவகைகள் மட்டுமே எனக்குத் தெரியும் தற்பொழுது காட்சிப்படுத்தப்பட்ட வகையில் அரிசி நெல் வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளை நேரடியாக சென்று பார்வையிட்டோம் அன்றாடம் உணவு வகையில் அரிசியாக உள்ளது என்பது தெரியும் ஆனால் இங்கு நேரடியாக வந்து பார்க்கும் பொழுது பல்வேறு வகையான அரிசிகள் உடல் நலத்திற்கு பாதுகாக்கும் வகையில் உள்ளது என்பது தெரிந்து கொண்டோம்.
நமக்குத் தெரியாத அரிசி வகைகளை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக் கொள்ளும் வசதி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது மகிழ்ச்சியளித்துள்ளது.
குழந்தைகளுக்கு மைதா மாவு வகைகளில் வாங்கிக் கொடுக்கும் பிஸ்கட்டை விட சிறுதானிய வகைகளில் பிஸ்கட் வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது எதனை வாங்கிக் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு இயற்கையான உடல் நலத்திற்கு ஆரோக்கியமாக இருக்கும்.
தேனீக்கள் கூடு கட்டி இருக்கு ஆனால் இதனை நாம் வியாபாரமாகவே செயல்படுத்தலாம் என விளக்கம் அளித்தனர். பின்னர் அதனை சுவைத்து பார்க்கும் பொழுது இயற்கையான தேன் சுவைக்கும் பொழுது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த இயற்கை விவசாய கண்காட்சி மூலமாக பல்வேறு தகவல்களை நாங்கள் பெற்றோம் என அப்பொழுது தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்