பெண்களே நீங்கள் எலக்ட்ரிக் சாதனங்களை சுத்தம் செய்கிறீர்களா..?
நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மிக்ஸி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகிய எலக்ட்ரிக் சாதனங்களை அடிக்கடி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு பயன்படக்கூடிய இத்தகைய பொருட்கள் கட்டாயம் சுத்தமாக உள்ளதா என பார்த்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பதிவில் எலக்ட்ரிக் சாதனங்களை எவ்வாறு சுத்தம் செய்யலாம் என பார்க்கலாம்.
மிக்ஸி:
நம் வீட்டில் அன்றாடம் பயன்படும் மிக்ஸியில் உணவு பொருட்கள் படிந்து அப்படியே காய்ந்துபோய் அதன் நிறத்தையே மாற்றிவிடும். அதுபோல அழுக்குகள் படிந்தும், சமைக்கும்போது எண்ணெய் பசையும் படிந்து ஒரே அழுக்காக இருக்கும்.
அவ்வபோது மிக்ஸியை கையுடன் சுத்தமாக துடைத்து முடித்து விடுங்கள்.
ஒரு மக்கில் சிறிது தண்ணீரில் கொஞ்சமாக டிஷ்வாஷிங் லிக்விட் சேர்த்து கலந்து ஒரு துணியில் நனைத்து சுத்தமாக துடைத்துக் கொள்ளவும்.
பின் கடைசியாக ஒரு காய்ந்த துணியை கொண்டு துடைத்துக் கொள்ள வேண்டும்.
வாஷிங் மெஷின்:
வீட்டில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு சாதனம் வாஷிங் மெஷின். ஆனால் இதை பெரும்பாலும் சுத்தம் செய்வது எப்படி என தெரியாது. எப்படி சுத்தம் செய்யலாம் என பார்க்கலாம்.
பேக்கிங் சோடா மற்றும் வினிகரை தண்ணீரில் கலந்து மெஷினில் ஊற்றவும், மெஷினில் பாதி ட்ரம் அளவிற்கு தண்ணீர் நிரப்பி மிஷினை ஆன் செய்து ஓட விடவும். இதில் படிந்திருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீரில் வந்துவிடும்.
ஃபிரிட்ஜ்:
ஃபிரிட்ஜில் நாம் உண்ணும் உணவுகளை சேமிப்பதால் அதனை சுத்தமாக வைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஃபிரிட்ஜை அடிக்கடி சுத்தம் செய்தால் அழுக்குகள் அண்டாது.
முதலில் ஃபிரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு பின் அதில் இருக்கும் அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வைக்கவும்.
பின் அதில் இருக்கும் ட்ரே அனைத்தையும் வெளியே எடுத்து சோப்பு நீரில் கழுவி பின் காய்ந்த துணியை கொண்டு துடைத்து காயவைக்கவும்.
இதுபோல சோப்பு நீரை பயன்படுத்தி ஃபிரிட்ஜின் உட்புறத்திலும் சுத்தம் செய்யலாம். வெளிப்புறத்திலும் இதே முறையை பயன்படுத்தலாம்.