சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு 15 கோடி நிவாரணம்…
பெருமழை வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ஆயிரம் கோடியில் நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்..
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன அதன்படி, சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல் செய்வதற்க்கு 385 கோடி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2 புள்ளி 64 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்திற்கு இழப்பீட்டு நிவாரணம் 250 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டியும், 1 இலட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான 3 லட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு 350 கோடி அளவில் புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு 15 கோடி நிவாரணம் அறிவித்துள்ள முதலமைச்சர், உப்பளத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா 3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.