பீகாரில் கோவிலுக்கு சென்றதில் பக்தர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!!
பீகார் மாநிலத்தில் உள்ள பாபா சித்தேஸ்வர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் ஜெகன்னாபாத் மாவட்டத்தில் பராபர் மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாபா சித்தேஸ்வர் கோயிலில் ஆண்டுதோறும் சாவன் புனித மாதத்தில் நடக்கும் சிறப்புப் பூஜைகளில் ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் அதிகபடியான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
இந்நிலையில் கூட்டநேரிசல் காரணமாக பக்தர்களிடையே சிறிய பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டநெரிசலில் 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..