இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி..!! முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கம்..!!
சட்டத்துறை சார்பில் இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் ரூ. 76.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதூர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் ரூ. 1.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடல் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்
அதுபோல் போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை முதலமைச்சர் முன்னிலையில் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சிறப்பு பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..