வெள்ளிகிழமை வீட்டில் செய்ய வேண்டிய முக்கிய பரிகாரங்கள்..!!
வெள்ளிகிழமை என்றாலே மிகவும் விஷேசமான நாள்.., மற்ற நாட்களில் வீட்டில் பூஜைகள் செய்யவில்லை என்றாலும் வெள்ளிகிழமைகளில் வீட்டில் தீபம் ஏற்றி பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள். காரணம் வீட்டில் லட்சுமி வரவு அதிகரித்து.., ஐஸ்வர்யம் பெறுக வேண்டும் என்பதற்காக. அப்படி வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகுவதற்கான ஐந்து வழிகளை பார்க்கலாம்.
1. பெண்கள் சூரியன் உதிக்கும் முன்னரே எழுந்து குளியலிட்டு நெற்றியில் குங்குமம் இட்டு.., அதன் பின்னரே சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
அப்படி செய்தால் வீட்டில் இருள் நீங்கி விடும் என்பது ஐதீகம்.., அதுமட்டுமின்றி சூரிய ஒளி மேலே பட்டால் நோய்கள் தீரும் என்பதும் உண்மை.
2. காலையில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றிய பின் வாசலின் பின் புறமும் முன் புறமும் கோலமிட்டு வாசப்படியின் மேல் மஞ்சள் நீர் தெளிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால், வீட்டில் தீய சக்திகள் உள்ளே வராது.
3. வீட்டின் பூஜை அறையில் சாமி படங்கள் மற்றும் விளக்குகளை சுத்தம் செய்து மஞ்சள் குங்கமிட்டு பூக்களால் அலங்கரித்து, தீபத்தின் கீழ் பச்சரிசி வைக்க வேண்டும்.
அப்படி செய்தால் வீட்டில் அன்னபூரணி அருள் கிடைக்கும்.
4. வீட்டில் விளக்கு ஏற்றும் முன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதை விட நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
அவ்வாறு செய்தால் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
5. வீட்டில் பூஜை அறையில் 3 விளக்குகளும் அதாவது 2குத்து விளக்கு மற்றும் 1 காமாட்சி அம்மன் விளக்கு ஏற்ற வேண்டும். மற்றும் வீட்டின் தலை வாசலில் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
வீட்டில் விளக்கு ஏற்றுவதால் என்ன பலன்..? ஏன் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ளே இங்கே பார்க்கவும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..