தவெக சார்பில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!! தளபதி விஜய் சொன்ன அப்டேட்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் இன்று கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக தளபதி விஜய் தெரிவித்துள்ளார்..
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது.. கட்சி தொடங்கி ஒரு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் கட்சியின் கொடியும், கட்சியின் பூவும் வெளியிடப்பட்டது..
கட்சிக்கொடி :
மேலே கீழே இரண்டு இளம் சிவப்பு நிறமும் நடுவே மஞ்சள் நிறமும் கொண்டுள்ளது.. அதில் மஞ்சள் நிறத்தில் அதில் இரண்டு பக்கம் யானையும் நடுவே வாகை பூவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது..
இந்த கொடியானது கடந்த மாதம் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்றப்பட்டது.. அதன் பின் ஆகஸ்ட் 23ம் தேதி கட்சியின் பாடலும் வெளியானது…
கட்சி மாநாடு :
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜய் அவர்களுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என சொல்லலாம்.. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு தொகுதியில் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..
அதே சமயம் கட்சியின் முதல் மாநாடு இந்த மாதம் 23ம் தேதி நடத்த இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.. கட்சி மாநாட்டிற்காக மதுரை, திருச்சி, சேலம் என பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த இடம் தேடப்பட்ட நிலையில், அங்கு இடம் கிடைக்காததால் விக்கிரவாண்டியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை மாநாடு நடத்த தவெக நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர். எனவே கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்படவுள்ளது.. என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
கட்சிக்கு அங்கீகாரம் :
இன்று காலை தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம் வில்லிவாக்கத்தில் நடைபெற்றது. மறுபக்கம் தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆங்கில எழுத்தும் (டிவிகே) விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆங்கில எழுத்தும் டிவிகே என்பதால் வேல்முருகன் விஜயின் கட்சிக்கு அங்கீகாரம் வழங்க கூடாது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கு அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது…
கட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்புகளை தலைவர் விஜய் வெளியிடுவாரா அல்லது மாநாடு நடக்கும் இடத்தில் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்..
கட்சிக்கு அங்கீகாரம் பெறப்பட்டதை அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..