தவெக முதல் மாநாடு..!! காவல்துறை போட்ட ரூல்ஸ்..!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த உள்ள நிலையில் காவல்துறை சார்பில் சில விதிகள் விதிக்கப்பட்டுள்ளது..
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் கட்சி தொடங்கி ஒரு ஆண்டுக்கள் நிறைவுபெற்றுள்ளது.. ஆனால் கட்சி தொடங்கி நாளில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சமீபத்தில் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி கட்சி பாடலையும் வெளியிட்டார். இரண்டு சிவப்பு நிறங்களுக்கு, நடுவே மஞ்சள் நிற கொடியில் அதன் நடுவே இரண்டு போர் யானைகளுக்கு , நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. கொடி வெளியிட்டுக்கு பிறகு இரண்டு போர் யானைகள் குறித்து பெரும் சர்சையை கிளப்பியது.
இந்தநிலையில் கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் விக்கிரவாண்டி, மதுரை அல்லது திருச்சி ஆகிய 3 மாவட்டத்தில் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் தனது மீட்டிங்கை தொடங்க போவதாக தகவல்கள் அக்கட்சி தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்
இந்த மாதம் செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடக்கும் என உறுதியாகியுள்ளது.. அதே சமயம் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கு அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது
கட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான அறிவிப்புகளை தலைவர் விஜய் வெளியிடுவாரா அல்லது மாநாடு நடக்கும் இடத்தில் அறிவிப்பாரா என்று பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்க விழுப்புரம் காவல்துறையினர் சார்பில் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளது..
தமிழக வெற்றிக் கழக கட்சியின் மாநாட்டிற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக விழுப்புரம் டிஎஸ்பி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது.
குழந்தைகள், பெரியவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்
பெண்கள் பங்கேற்கும் படி இருந்தால் அவர்களுக்கு தனி கழிப்பறை வசதி ஏற்படுத்தி இருக்க வேண்டும்..
என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..